நீலகிரி மாவட்டம் உதகை நகர திமுக நிர்வாகிகள் மற்றும் உதகை நகராட்சி மன்ற தலைவர், துணை தலைவர், உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட திமுக அலுவலகம், உதகை கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட செயலாளர் திரு. பா.மு.முபாரக் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் இளங்கோ, பொதுக்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா, உதகை நகர செயலாளர் ஜார்ஜ் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர்.
கூட்டத்தில் உதகை நகர திமுக நிர்வாகிகள், உதகை நகராட்சி தலைவர், துணை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment