தூனேரி அகலாரில் உள்ள நமது குருகுலம் பள்ளியில் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான பதினைந்தாவது ஆண்டு விளையாட்டு தின விழா - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 31 August 2024

தூனேரி அகலாரில் உள்ள நமது குருகுலம் பள்ளியில் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான பதினைந்தாவது ஆண்டு விளையாட்டு தின விழா



நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தூனேரி அகலாரில் உள்ள நமது குருகுலம் பள்ளியில் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான பதினைந்தாவது ஆண்டு விளையாட்டு தின விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி துனேரி  நீலகிரி மாவட்டத்தில் தலைமை ஆசிரியராக பணிபுரியும் திருமதி பி .என் .பார்வதி எம்.எஸ்.சி.,எம்.ஏ., எம்.பில்., பி. எட்., அவர்கள் கலந்து கொண்டார். 



இவ்விழா முற்பகல் 11 மணி அளவில் தேசியக்கொடி ஏற்றத்துடன் தொடங்கப்பட்டது. சுமார் 160 மாணவர்கள் பிரிவு (ஹவுஸ்) வாரியாக அதாவது சாமா ,ஆயுர், ரிக் ,யசூர் என அணிவகுத்து வந்தனர். பத்தாம் வகுப்பைச் சேர்ந்த மாணவி செல்வி ஆர். கே. சார்மி வரவேற்புரை வழங்கினார்.விழாவில் 300 மாணவர்களும் சுமார் 250    பெற்றோர்களும் கலந்து கொண்டனர். 



பள்ளியின் நிர்வாக தலைவர் திருமதி L.வாசுகி அவர்கள் சிறப்பு விருந்தினரைப் பற்றிய அறிமுக உரை அளித்ததுடன் அவருக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தார். பள்ளியின் முதல்வர் திரு சுரேஷ் பாபு அவர்கள் நடுவர்களான முன்னாள் படை வீரர் திரு ஆர். சிவன் மற்றும் இசை ஆசிரியர் திருமதி டி. ஆர். பிரேம குமாரி அவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தார். 


சிறப்பு விருந்தினர் திருமதி பி .என் .பார்வதி ஒலிம்பிக் டார்ச் உடன் விழாவைத் தொடங்கி வைத்தார். பள்ளியின் மாணவர் தலைவர் ஆர். கே .சார்மி மற்றும் மாணவர் துணைத் தலைவர் எஸ்.சவுரிஷ் அவர்களுடன் நான்கு ஹவுஸைச் சேர்ந்த கேப்டன்கள் கே.தீக்ஷா, எஸ்.சாதனா,எஸ். ஜிசாய், டி .சரிதா மற்றும் துணை கேப்டன்கள் பி.ஹர்ஷத், பி. பிரீத்தா ஸ்ரீ ,ஆர்.கார்னியா , ஆர்.சஞ்சனா ஆகியோர் அத்லெட்டிக் விளக்கை ஏற்றினர். மாணவர்களின் உறுதிமொழியுடன் விழா இனிதே தொடங்கப்பட்டது. 


தொடக்க விழாவாக சப் ஜூனியர்களின் ட்ரில் நடைபெற்றது இதில் மாணவர்கள் வெவ்வேறு கருவிகளைக் உபயோகப்படுத்தினர். அடுத்ததாக கே .ஜி. மாணவர்களின் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. தொடர்ந்து சிறந்த தற்காப்பு கலையான சிலம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சீனியர்களுக்கான ட்ரில் நடைபெற்றது. மாணவர்கள் வெவ்வேறு விதமான கருவிகளை பயன்படுத்தி அதன் மூலம் செய்திகளையும் தெரிவித்தனர். தொடர்ச்சியாக ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.


அடுத்ததாக மாணவர்களுக்குள் குத்துச்சண்டை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சுமார் 100 மாணவர்கள் தியானம் மற்றும் சூரிய நமஸ்காரத்துடன் வித்தியாசமான ஆசனங்களை செய்த யோகா நிகழ்வு நடைபெற்றது .பிறகு பிரிவு வாரியாக மாணவர்கள் மற்றும் மாணவிகளின் ரிலே ஓட்டப்பந்தயம் நடந்தது. அனைவரும் கைதட்டி அவர்களை உற்சாகப்படுத்தினர்.


தொடர்ச்சியாக மாணவர்களுக்கான கராத்தே நிகழ்வு நடைபெற்றது . இதில் நடனம் ,கட்டா ,பிரேக்கிங், ஃபையர் ஜம்பிங் மற்றும் பிரமிடு ஆகியவை இடம் பெற்றன.

தொடர்ந்து  முன்னாள் படைவீரர் ஆர்.சிவன் அவர்கள் நெருப்பைப் கையாளுவதில் பின்பற்றப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றிய செயல் விளக்கம் தந்தார்.

தொடர்ந்து மாணவர்களின் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளுக்கான பரிசளிப்பும் , வழங்கப்பட்டன.

சிறப்பு விருந்தினர் மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் பதக்கங்களையும் வழங்கி வாழ்த்தினார்.



 சிறப்பு விருந்தினர் திருமதி B.N. பார்வதி அவர்கள் பேசுகையில்,  குழந்தைகள்  விளையாட்டில் ஈடுபட வேண்டும். பள்ளிக்கூடம் என்பது குழந்தைகளுக்கு அனைத்தையும் வழங்கும் ஓர் இடமாகும். அதில் குழந்தைகள் தங்களை முன்னேற்றிக் கொள்ள வேண்டும். குருகுலம் பள்ளியின் பல்வேறு நிகழ்வுகளின் புகைப்படங்களைப் பார்த்து வியந்து போனதாகவும் அதைப்பார்த்து மகிழ்ந்ததாகவும் கூறினார்.


இறுதியாக வெற்றி பெற்ற அணிகளான சாமா  (வின்னர்ஸ்) ஹவுஸ்   மற்றும் ஆயுர்   (ரன்னர்ஸ்) ஹவுஸ் களுக்கு ஷீல்டு மற்றும் டிராபி வழங்கப்பட்டது. போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்ற மாணவர்கள்    S.சாதனா ,S.சௌரிஷ், P.ஹர்ஷத் , A.G.தர்ஷன்  ஆகியோருக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. 


இறுதியில் வெற்றி பெற்ற அணிகள் வாரியாக மாணவர்கள் அணிவகுப்பு நடைபெற்றது.

மாணவர் துணைத் தலைவரான ஒன்பதாம் வகுப்பைச் சேர்ந்த எஸ். சௌரிஷ் நன்றி உரை வழங்கினார். தேசிய கீதத்துடன் விழா இனிதே முடிவுற்றது. 


தமிழக இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட புகைப்பட கலைஞர் என் .வினோத்குமார்.

No comments:

Post a Comment

Post Top Ad