நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நெடுகுளா அருள்மிகு ஶ்ரீ ஜெடையசுவாமி திருக்கோயில் மஹாகும்பாபிஷேக பெருவிழா சீரும் சிறப்புமாக ஆகஸ்ட் 19 திங்கட்கிழமை அன்று நடைபெற்றது . விடியற்காலை 3 மணிமுதல் ஹோமகுண்ட பூஜையுடன் தொடங்கி கலசத்திற்க்கு புனித நீர் அபிஷேகம் செய்து மஹா கும்பாபிஷேக விழா சிறப்புபூஜையுடன் தொடங்கி அனைத்து ஊர்மக்களும் கலந்துகொண்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. படுக மக்கள் பாரம்பரிய நடனமாடினர். பக்தி பஜனை நடைபெற்றது. மாவட்டத்தின் அனைத்து பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ஐய்யனின் ஆசி பெற்றுச்சென்றனர்.அருள்மிகு ஶ்ரீ ஜெடையசுவாமி ஐய்யன் மஹா கும்பாபிஷேக விழாவிற்க்கான ஏற்பாடுகளை நெடுகுளா ஊர் நாட்டாமை திரு. மணியகார பெள்ளாகவுடர் அவர்கள் தலைமையில் நெடுகுளா இளைஞர்கள் பெண்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment