கூடலூர் அருகே உள்ள பழங்குடி கிராமங்களான குனில்வயல், பேபிநகர், நரிமூலா, சீரணங்கொல்லி, வீச்சனங்கொல்லி, பெண்ணை, முள்ளன்வயல், விலங்கூர் உள்ளிட்ட கிராமங்களில் வசித்து வரும் பழங்குடியின மக்களுக்கு சில்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் அமைப்பு மூலம் அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சில்ட்ரன் சேரிட்டப்பிள் டிரஸ்ட் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராம் தலைமை தாங்கினார். கூடுதல் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பிரனேஷ், முகம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு பழங்குடி சங்க மாவட்ட அமைப்பாளர் மகேந்திரன் துவக்கி வைத்தார். தொடர்ந்து சில்ரன் சார்ட்டபிள் டிரஸ்ட் அமைப்பினர் பல்வேறு பகுதிகளில் பழங்குடியினர் குடும்பங்களுக்கு மளிகை பொருட்களை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் 400 மேற்பட்ட பயனாளிகளுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment