கோத்தகிரியில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இடையே போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த மராத்தான் ஓட்டம் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு ஐலேண்ட் அறக்கட்டளை தலைவர் திரு. அல்போன்ஸ் ராஜ் அவர்கள் தலைமை தாங்கினார் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர் ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு .கே. ஜே. ராஜு அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இளைஞர்களிடையே உரையாற்றினார் அப்பொழுது அவர் கூறிய கருத்துக்கள் ....
மனித மூளை என்பது ஒரு அற்புதமான சூப்பர் கம்ப்யூட்டர் அதில் ஒரு கோடி செல்களும் பத்தாயிரம் கோடி நியூரான்களும் இடைவிடாது இயங்கி வருகின்றன நமது மனமும் மூளையின் ஒரு பகுதியே மனித மனம் எப்பொழுதும் மகிழ்ச்சியே தேடிக் கொண்டிருக்கும் இயல்புடையது . மகிழ்ச்சியை விரும்பும் போதெல்லாம்
மூளை டோபோமைன் ஒரு என்சைம் ஐ உருவாக்கும். நட்பு நேசம் காதல் போன்ற பலவிதமானமகிழ்வு தரும் உணர்வுகளுக்கும் இந்த டோபோமை தான் காரணம். இளைஞர்கள் எப்போதும் செல்போனில் மூழ்கி இருப்பதற்கும் காரணம் இந்த டோபோமை தான். தோபோ மைனின் சிறப்பு அளவாக இருந்தால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். அளவு மீறும் போது போதைக்கு அடிமையாகிறார் இந்த மகிழ்வே தரக்கூடிய டோபோ மைனை தூண்டுவதில் போதைப் பொருள்களுக்கு முக்கிய பங்கு உண்டு மதுபானங்கள் டோபோ மைனை தூண்டி மகிழ்வு தரும் அதே சமயம் மதுவில் உள்ள எத்தனால் என்ற திரவம் மூளையில் செல்களை அழித்து சிதைக்கிறது.
உடலின் எந்த பாகம் பழுதடைந்தாலும் அது மீண்டும் இயற்கையால் மீட்டெடுக்கப்படுகிறது ஆனால் மனித மூளை மட்டும் ஒருமுறை செயல் இழந்ததை திரும்ப பெற இயலாது குடிப்பவரின் மூளை மட்டும் இதனால் பாதிக்கப்படுவதில்லை அவருடைய சந்ததிகளின் மூளையும் மரபணு மூலம் பாதிக்கப்படுகிறது. மற்ற போதைப் பொருட்கள் காற்றில் மிதப்பது போன்ற சுகமான உணர்வைத் தந்தாலும் மூளை மட்டுமின்றி நரம்பு மண்டலத்தின் அணுக்கள் அனைத்தையும் சிதைக்கிறது. மனித குலம் தோன்றிய காலம் தொட்டே தொடர்ந்து வருகிற இந்த போதை குறித்து உலகப் புகழ்பெற்ற நாடக ஆசிரியர் ஷேக்ஸ்பியர் அவர்கள் விதியே உன் பெயர் என்ன மதுவாஎன்று கேட்கிறார். இன்று விதி தான் மது மற்றும் போதை மருந்துகள் வழியாக பலருடைய வாழ்க்கையை சீரழித்துக் கொண்டிருக்கிறது. போதை அதை பயன்படுத்துபவரை மட்டுமல்ல அவரைச் சுற்றியுள்ள உறவினர்கள் நண்பர்கள் என 200 பேரை மனநோயாளிகளாக மாற்றுகிறது என ஒரு ஆய்வு கூறுகிறது மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இதனைப் புரிந்து கொண்டு போதை பழக்கத்தின் பக்கமே போகாமல் இருப்பது தான் அறிவுடைமை என்பன போன்ற பல கருத்துக்களை ஆசிரியர் திரு. ராஜு அவர்கள் கூறினார்.
நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்துகொண்டு கோத்தகிரியில் உள்ள டானிங்டன் முதல் பஸ் நிலையம் வரை நடைபெற்ற மராத்தன் ஓட்டத்தில் பங்கு பெற்றனர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது முன்னதாக வள்ளலார் நற்பணி மன்றத்தின் செயலர் ஓய்வு பெற்ற பேராசிரியர் முனைவர் சுஜாதா அவர்கள் அனைவரையும் வரவேற்றார் இசை அறக்கட்டளையின் தலைவர் திருமதி. சாராள், கேர் அறக்கட்டளையின் மண்டல கள இயக்குனர் திரு. வினோபாப் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K .A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.


No comments:
Post a Comment