நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கேர்கம்பையில் அமைந்துள்ள ஹில்போர்ட் பள்ளியில் சுதந்திர தினவிழா தேசியக்கொடியேற்றி மரியாதை செய்யப்பட்டதுடன் பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து, கைப்பந்து சுழற்கோப்பைக்கான போட்டிகள் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது பள்ளியின் தாளாளர் டாக்டர்.திரு. ரவிக்குமார் அவர்கள் அனைவரையும் வரவேற்று சிறப்புரையாற்றினார்.
சிறப்பு விருந்தினர்களாக ரோட்டரி கவர்னர் Rtn.MD.டாக்டர். திரு. சுரேஷ்பாபு மற்றும் கோத்தகிரி காவல் ஆய்வாளர் திரு. ஜெயமுருகன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி விளையாட்டு போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர். ரோட்டரி சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சுதந்திர விழாவை சிறப்பாக கொண்டாடினார்கள்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.




No comments:
Post a Comment