நீலகிரி மாவட்டம் எமரால்டு காவல் நிலையத்தில் மூன்று மாதங்களுக்கு முன்பு சுமார் ரூபாய் 25000 மதிப்புள்ள தனது செல்போனை காணவில்லை என்று புகார் அளித்திருந்த நிலையில் புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் சிறப்பு பிரிவு அதிகாரியான திரு அப்பாஸ் உதவி ஆய்வாளர் மற்றும் எமரால்டு காவல்துறையினர் இணைந்து செல்போனின் IMEI நம்பரை வைத்து அவர்களது செல்போனை கண்டுபிடித்து நேற்றைய தினம் எமரால்டு காவல் நிலையத்தில் எமரால்டு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு மகேந்திரன் மற்றும் பணிபுரியும் சக காவல்துறையினர்களுக்கு முன்வைத்து உரியவர்களிடம் செல்போன் ஒப்படைத்தார்கள். செல்போன் உரிமையாளர் எமரால்டு காவல்துறையினர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment