நேற்றைய முன் தினம் நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிக்கு உட்பட்ட ஜெகதளா பகுதியில் வீட்டில் வளர்த்து வந்த வளர்ப்பு நாயை வீட்டின் மொட்டை மாடியில் தங்க வைத்திருந்த பொழுது இரவு நேரத்தில் வனத்துறைக்குள் இருந்து ஊருக்குள் புகுந்த சிறுத்தை வளர்ப்பு நாயை வேட்டையாடி சென்றது சிசிடிவி கேமரா மூலம் பதிவாகியுள்ளது இந்த பதிவினை கண்டு அவ்வூர் பொதுமக்கள் அனைவரும் மிக அச்சத்தில் உள்ளனர். மேலும் இத்தகைய செயல்கள் நடக்காமல் இருக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊர் பொதுமக்கள் கோரிக்கையாக விடுத்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment