வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களின் வங்கி கடன்களை ரத்து செய்ய வேண்டும் பினராயி விஜயன் வேண்டுகோள் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 20 August 2024

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களின் வங்கி கடன்களை ரத்து செய்ய வேண்டும் பினராயி விஜயன் வேண்டுகோள்



          வயநாடு  மிகப்பெரிய கோர நிலச்சரிவில் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டதுடன் தன் குடும்பத்தை இழந்து தவித்து வருகின்றனர் இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களின் வங்கி கடன்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என கேரள முதல்வர் பின்னராய் விஜயன் வலியுறுத்தியுள்ளார். வங்கிகள் கூட்டமைப்பு கூட்டத்தில் அவர் கூறியதாவது வட்டித் தொகையில் தளர்வு அல்லது மாதாந்திர தவனை நீட்டிப்பு ஆகியவை நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான தீர்வாக இருக்காது என்றும், கடன்களை ரத்து செய்வதால் வங்கிகளுக்கு பெரிய அளவில் சுமைகள் ஏற்படாது எனவும் தெரிவித்தார். இப்பொழுது அவர்கள் தனது குடும்பத்தை இழந்து இருப்பிடம் இல்லாமல் தவித்து வருகின்றனர் இந்நிலையில் நீங்கள் வங்கிக் கடன்களை கேட்டு அவர்களை வற்புறுத்தினால் அவர்களால் வங்கிக் கடன்களை செலுத்த இயலாது என்றும் பினராய் விஜயன் தெரிவித்தார்.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad