நீலகிரி மாவட்டம் கோத்தகிரி டவுன் மற்றும் கிராமப்புர பகுதிகளில் கரடி பகல் நேரத்தில் உலா வருவது தொடர்கதையாக உள்ளது. இதே நிலை சிறுத்தையிலும் உள்ளது. தமிழக வனத்துறை என்ன செய்துகொண்டிருக்கிறது என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். நீங்கள் செய்தி வெளியிடுகின்றீர்கள் பொறுமையாக இருந்துவிட்டு அசம்பாவிதம் நடந்த பின்பு தான் நடவடிக்கை என முயல்கின்றனர் . இனிமேல் செய்தியாளர்கள் தங்கள் பணியை உதறிவிட்டு செல்லுங்கள் செய்திகள் சம்மந்தப்பட்ட துறைக்கு சென்று சேர்கிறதா அவர்கள் பார்க்க நேரமிருக்கிறதா பார்த்து நடவடிக்கை எடுக்கின்றனரா என பொதுமக்கள் கிண்டலடிக்கின்றனர் .
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment