நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பாண்டியர் அமைக்குளம் பகுதியில் பெண் யானை மர்மமான முறையில் இறந்து கிடந்தது வனத்துறை ஆய்வு....
நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள நாடு காணி ஆமைக்குளம் பகுதியில் உள்ள அரசு தேயிலைத் தோட்டத்திற்கு சொந்தமான நீர்வோடையில் 25 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று இறந்து கிடந்ததை பணிபுரிய வந்த தோட்டத்த தொழிலாளர்கள் பார்த்து வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
இந்நிலையில் முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ் மற்றும் கூடலூர் வன பாதுகாவலர் வெங்கடேஷ் பிரபு ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டனர். பின்பு டாக்டர் ராஜேஸ் அவர்கள் யானையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் யானை சேற்றில் சிக்கி உயிர் இழந்ததா? அல்லது வேறு காரணத்தால் உயிரிழந்ததா என்ற கோனத்தில் விசாரனை மேற் கொண்டனர்..
இந்த ஆய்வின் போது தேவால வனச்சரகர் சஞ்சீவி. ஓவேலி வன சரகர் சுரேஸ் . நடுவட்ட வனச்சரகர் அய்யனார் இவருடன் யானை கண்கானிப்பு குழு .வேட்டை தடுப்பு காவலர்கள் உடன் இருந்தனர்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment