நீலகிரி மாவட்டம் கோத்தகிரி காந்தி மைதானத்தின் அலங்கோல நிலை.
விடுமுறை நாட்களில் கூட விளையாட முடியவில்லை, சிறிது நேரம் அமரக்கூட இடம் இல்லை, என மாணவர்களும், விளையாட்டு வீரர்களும் முகம் சுளித்துக்கொண்டு வேதனை.
பல வீரர்களை உருவாக்கும் மைதானம், பல நோயாளிகளை உருவாக்கி விடுமோ என மாணவர்கள் அச்சப்படுவதாக கூறப்படுகிறது.
சம்பந்தப்பட்ட நிர்வாகமானது உடனடியாக, இதை சரி செய்து கொடுக்க வேண்டும் என மாணவர்களும், விளையாட்டு வீரர்களும், பொதுமக்களும் மற்றும் சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள்.
தமிழ்க்குரல் செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment