நீலகிரி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக்கொண்ட திருமதி.N.S. நிஷா அவர்கள் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மட்டும் இருந்து பணிபுரியாமல் பல பகுதிகளுக்கு நேரில் சென்று சுறு சுறுப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் உதகை அரசு சேட் மகப்பேரு மருத்துவ மனைக்கு திடீர் விசிட் அடித்தார் அதனால் மருத்துவமனை வளாகம் பரபரப்படைந்தது. அரசு உயரதிகாரிகள் வருவது முன்கூட்டியே தெரிவிப்பதால் அந்த நேரத்தில் மட்டுமே எல்லாம் சரியாக இருப்பது போல் பல இடங்களில் நடப்பது தொடர்கதை ஆனால் இதுபோல் திடீர் விசிட்டால் என்றுமே சரியாக இருக்கும் என்றும் இது போல் எஸ்.பி அவர்கள் பல இடங்களில் திடீர் விசிட் அடிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பாராட்டுக்களையும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment