நேற்றைய தினம் சுமார் 12 மணியளவில் தமிழக குரல் இணையதள செய்திப் பிரிவு மற்றும் வாசகர்கள் சார்பாக வயநாட்டில் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 18 பேர் கொண்ட குழு மூன்று வாகனத்தில் நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது. நிவாரண பொருட்களை மக்களுக்கு கொண்டு சொல்கிறோம் என்று தெரிந்தவுடன் நீலகிரி மாவட்டம் உதகை காந்தல் பகுதியில் வசிக்கும் சம்பத் புஷ்ப லட்சுமி குடும்பத்தினர் வயநாடு பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கம்பளிகள் புடவை துணிகள் வழங்கினர். இத்தகைய நல் உள்ளம் கொண்ட அவர்கள் குடும்பத்திற்கு தமிழக குரல் இணையதள செய்தி பிரிவின் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். மற்றும் இந்த நிவாரண பொருட்களை அவர்களிடம் இருந்து பெற்று எங்களிடம் வழங்கிய தலைமை செயலக அனைத்து பத்திரிகையாளர் சங்க மாவட்டத் தலைவர் சரவணன் மற்றும் மாவட்ட செயலாளர் லாரன்ஸ் ஆகியோர்களுக்கும் தமிழர் குரல் இணையதள செய்தி பிரிவின் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment