நீலகிரி மாவட்டம் கூடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மசினகுடி ஊராட்சி மாயார் பகுதியில் சாலை மின்சார முகாம் ஊழியர் குடியிருப்பில் சுமார் 32 குடும்பங்கள் குடியிருப்பில் குடிசைகளை அமைத்து தங்கி வருகின்றனர். அவர்களுக்கு சரியான குடியிருப்பு மின்சாரம் என எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி இத்தகைய காலங்களிலும் வாழ்ந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி 60 குடும்பங்கள் நிலமற்ற வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். ஆக மொத்தம் அந்த பகுதியில் 92 குடும்பங்கள் அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வருகின்றனர்.
கடந்த வருடம் வருவாய் துறை மூலம் கணக்கெடுக்கப்பட்டு அதன் நகல்களை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள நில அளவை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் இதுவரையிலும் எந்த ஒரு பதிலும் அந்த மக்களுக்கு கிடைக்கவில்லை மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் இல்லாமல் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர் மாயார் சாலை மின்சார முகாமில் வசிக்கும் மக்கள். எனவே மாவட்ட ஆட்சியர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரூ அவர்களை சந்தித்து மசினகுடி பகுதியில் இந்த 92 குடும்பங்களுக்கு விரைவில் பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மசினகுடி மக்கள் சார்பாக கேட்டுக் கொண்டார் கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனாஅவர்கள்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment