நீலகிரி மாவட்டம்
கோத்தகிரி ஆசிரியர் பயிற்சி நிறுவன வளாகத்தில் ஆகஸ்ட் 21புதன்கிழமை அன்று லயன்ஸ் கிளப் கோத்தகிரி மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நீலகிரி இணைந்து நடத்திய காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை குறித்து தேசிய பசுமை படைத்திட்ட மாணவர்களுக்கு சிறப்பு கருத்துரங்கு மற்றும் பயிற்சி முகாம் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு கோத்தகிரி லயன்ஸ் கிளப் தலைவர் திரு.C.B.ராமச்சந்திர ரெட்டி அவர்கள் தலைமை தாங்கினார் தொழிலதிபர் மற்றும் லயன்ஸ் கிளப் பட்டயத்தலைவர் திரு . H.R.M.போஜராஜன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார் சிறப்பு கருத்தாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர் மற்றும் ஓய்வுபெற்ற ஆசிரியர் திரு.கே .ஜே .ராஜு அவர்கள் பேசும் போது பூமி தற்போது ஆறாவது பேரழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் ஒரு லட்சம் ஆண்டுகள் நீடித்த பணியுகத்திலிருந்து தப்பித்த மனித சமுதாயம் தற்போது வந்துள்ள காலநிலை மாற்றத்தில் இருந்து உண்டாகும் பேரழிவில் தப்பிக்க முடியாது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளதாகவும் 2100 ஆம் ஆண்டுக்குள் பூமியின் வெப்பநிலை 5 டிகிரி அதிகரிக்கும் அதன் விளைவுகள் என்பன போன்ற பல கருத்துக்களை கூறினார்.
குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு குழுவை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் திரு. மனோகரன் அவர்கள் பேசும் போது புவி வெப்பத்திற்கு மூல காரணமே மக்களின் நுகர்வு பேராசையும் வரைமுறை இல்லாத நுகர்வும் தான் காரணம் என குறிப்பிட்டார் விஞ்ஞானி திரு . ஜனார்த்தனன் அவர்கள் பேசும்போது புவி வெப்பத்திற்கு காரணமான எல்னினோ லானினோ போன்ற போன்ற கருத்துக்களை விளக்கி கூறினார்.
நெஸ்ட் அறக்கட்டளையின் தாளாளரும் தேசிய பசுமைப்படை திட்டத்தின் நீலகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான திரு. சிவதாஸ் அவர்கள் மூலிகைச் செடிகளை வளர்ப்பதன் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். தமிழ்நாடு தீயணைப்புத் துறையின் கோத்தகிரி கிளைத் தலைவர் திரு. பிரேம் மற்றும் குழுவினர் பேரிடர் காலத்தில் நாம் மேற்கொள்ள வேண்டிய தற்காப்பு திறன்களை குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர் முன்னதாக லயன்ஸ் கிளப் செயலர் அனைவரையும் வரவேற்றார். அருண் பெள்ளி நன்றி கூறினார்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K . A . கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.




No comments:
Post a Comment