கோத்தகிரி காவல்துறை, மக்கள் நல சங்கம் இணைந்து பார்க்கிங் பிரச்னைகளுக்கு தீர்வு. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 21 August 2024

கோத்தகிரி காவல்துறை, மக்கள் நல சங்கம் இணைந்து பார்க்கிங் பிரச்னைகளுக்கு தீர்வு.



நீலகிரி மாவட்டம் கோத்தகிரி டவுன் மிக சிறிய டவுன் பகுதியாகும் மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக கோத்தகிரி வர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் சிறிய இடத்தில் அளவுக்கு அதிகமான வாகனங்கள் வந்து செல்வதால் பார்க்கிங் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. இந்த நிலையில் கோத்தகிரி மக்கள் நல சங்கம்  கோத்தகிரி காவல் துறையுடன் இணைந்து இந்த வாகன நெரிசலை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஒரு கலந்தாய்வு கூட்டம் நடத்தியதில் கோத்தகிரி டவுனில் பயன்படுத்தாமல் உபயோகமற்ற நிலையில் சாலையோரங்களில் அதிக நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகன உரிமையாளர்களுக்கு கூறி இரண்டுநாட்கள் அவகாசம் கொடுத்து அப்புறப்படுத்த அறிவுரைகள் வழங்கப்பட்டது. அதையும் மீறி அப்புறப்படுத்தவில்லையெனில் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என  கோத்தகிரி காவல்துறை அறிவித்துள்ளது.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad