கோத்தகிரி அருகே வெள்ளிரிக் கம்பை கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மனைவி ஜானகி வயது 60 நேற்று மாலை 6.30 மணியளவில் ஜானகி தனது வீட்டிற்கு வெளியே நின்றுக் கொண்டிருந்தார் அப்போது திடீரென புதர் மறைவில் இருந்து வெளியே வந்த காட்டு யானை ஜானகி அம்மாவை தாக்கி தூக்கி வீசியது இதனால் பலத்த காயமடைந்த ஜானகி அம்மா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
யானையின் சத்தம் கேட்ட அந்த ஊர் மக்கள் தீ பந்தத்தை காட்டி யானையை காட்டிற்கு விரட்டினர்கள் இது குறித்து கோத்தகிரி போலீசார் கட்டப்பெட்டு வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர் அதன் பேரில் கட்டபெட்டு வனச்சரகர் செல்வகுமார் கோத்தகிரி இன்ஸ்பெக்டர் ஜெய முருகன் சம்பவ இடத்திற்கு சென்று ஜானகியின் உடலை மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
தமிழக குரல் இனையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணு தாஸ்


No comments:
Post a Comment