நீலகிரி மாவட்டம் உதகை ஊரக உட்கோட்டத்திற்கு உட்பட்ட அப்புக்கோடு பகுதியில் கஞ்சா விழிப்புணர்வு போக்சோ சட்ட விழிப்புணர்வு காவலன் எஸ் ஓ எஸ் ஆப் விழிப்புணர்வு மற்றும் கள்ளச்சாராய ஒழிப்பு விழிப்புணர்வு அப்புக்கோடு பொது மக்களுக்கு வழங்கப்பட்டது..
இந்த விழிப்புணர்வில் உதகை ஊரக உட்கோட்டம் துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி விஜயலட்சுமி தலைமை தாங்கினார். எமரால்டு காவல் நிலையத்தின் சார்பாக உதவி ஆய்வாளர் திரு மகேந்திரன் முன்னிலை வகித்தார். மற்றும் ஊர் பொதுமக்களுடன் அப்புக்கோடு ஊர் தலைவர் இணைந்து இந்த போதை விழிப்புணர்வு நடைபெற வழி வகுத்தார். இந்த விழிப்புணர்வில் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...



No comments:
Post a Comment