உதகை குன்னூர் ரோட்டில் அமைந்துள்ள கிரசன்ட் கேஸ்டல் பப்ளிக் பள்ளியில் 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று விழிப்புணர்வு பேரணி ஓட்டம் மாரத்தான் மூலம் சுதந்திர தின விழா இனிதே தொடங்கியது.
காலை 7.30 மணியளவில் Yes to Life No to Drugs என்னும் கருத்தை மையமாகக் கொண்டு நடத்தப்பட்ட விழிப்புணர்வு பேரணி ஓட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துக் கொண்டனர் .துணை காவல்துறை கண்காணிப்பாளர் சௌந்தரராஜன் மற்றும் பள்ளி தாளாளர் திரு. உமர் பரூக் ஆகியோர் பேரணி ஓட்டத்தை தொடங்கி வைத்தனர். கிரசன்ட் பள்ளி வளாகத்தில் இருந்து தலைகுந்தா வரை சுமார் 10 கிலோ மீட்டர் வரை மாணவர்கள் நடத்திய இவ்விழிப்புணர்வு பேரணி ஓட்டம் மூலம் மக்கள் விழிப்புணர்வு பெறுவர் என பள்ளி நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்தது. தொடர்ந்து பள்ளி வளாகத்தில் தலைமையாசிரியர் திருமதி. ஜாய்ஸ் டிக்ரூஸ் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து மாணவர் மற்றும் ஆசிரியர்கள் கொடி மரியாதை செலுத்தினார்.
மாணவர்களுக்கு மாறுவேடப் போட்டி , பேச்சுப்போட்டி , கதை சொல்லல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு விழா இனிதே நிறைவேற்றப்பட்டது.
தமிழக குரல் இணைத்தள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட புகைப்பட கலைஞர் என் வினோத்குமார்.



No comments:
Post a Comment