திறந்து கிடக்கும் கழிவுநீர் கால்வாய் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 13 August 2024

திறந்து கிடக்கும் கழிவுநீர் கால்வாய்



நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பேருந்து நிலையம் முன்பு, ஆபத்தான நிலையில், திறந்து கிடக்கும் கழிவுநீர் கால்வாய்.

பள்ளி மாணவ மாணவிகளும், வயதான முதியோரும், மாற்றுத்திறனாளிகளும் பொதுமக்களும், பேருந்திற்காக  அவ்வழியே நடக்கும் போது, தவறி கீழே விழும் நிலை உள்ளது.



மாலை வேளையில், இருளில் *யாராவது தடுமாறி, இந்தக் குழியில்  விழுந்தால் என்ன ஆகிவிடுமோ?* என்ற அச்சமும் பொதுமக்களிடையே நிலவி வருகிறது.


 சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து நிர்வாகமானது, பொதுமக்களின்  பாதுகாப்பை கருதி, உடனடியாக, துரித நடவடிக்கை எடுக்குமா? பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமா?* என்ற கேள்வி மக்களிடையே உள்ளது.

 தமிழக குரல் செய்திகளுக்குக்காக கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணு தாஸ்

No comments:

Post a Comment

Post Top Ad