சென்னையில் உள்ள ஆல் தி சில்ரன் அமைப்பு மூலம் கேரளா மாநிலம் வயநாட்டில் முண்டக்கை, சூரல்மலை, அட்டமலா போன்ற பகுதியில் ஏற்பட்டுள்ள பேரிடர் நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
இதில் மக்களுக்கு தேவையான அரிசி, மளிகை பொருட்கள், போர்வைகள், மற்றும் ஆடைகள் வழங்கப்பட்டது.
மேலும் மேப்பாடி பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பழங்குடி மக்களுக்கும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஆல் தி சில்ரன் அமைப்பின் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment