நீலகிரி மாவட்டம்
கீழ் கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு சிறப்பு கூட்டம் நடைபெற்றது நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை சிவா மணி அவர்கள் தலைமை தாங்கினார் நிகழ்ச்சியில் கீழ் கோத்தகிரி பஞ்சாயத்து தலைவர் திரு.முருகன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் பள்ளி மேலாண்மை குழுவின் முன்னாள் தலைவர் அம்சவேணி அவர்கள் முன்னிலை வகித்தார் 2024 26 ஆண்டுக்கான தலைவராக திருமதி. சங்கீதா அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார் துணைத் தலைவராக திருமதி . ஜான்சி ராணி அவர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார் நிகழ்ச்சியில் பெற்றோர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் திரளாக பங்கு பெற்றனர் இக்கூட்டத்திற்கு மாவட்ட நிர்வாக பார்வையாளராக மாநில கருத்தாளர் ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு. கே. ஜே. ராஜு அவர்கள் கலந்து கொண்டார்கள் முன்னதாக ஆசிரியை ராணி அவர்கள் வரவேற்றார் இறுதியில் ஆசிரியை ஷாலினி அவர்கள் நன்றி கூறினார்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.



No comments:
Post a Comment