நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கன்னேரிமுக்கு ஹட்டியில் நூற்றாண்டு மேல் பழமைவாய்ந்த ஶ்ரீ சந்தான வேணுகோபால் சுவாமி திருக்கோயிலில் ஆகஸ்ட் 24 சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு கொடியேற்றத்துடன் சிறப்பு பூஜை நடைபெற்று இந்த ஆண்டுக்கான விழா தொடங்கியது. ஆகஸ்ட் 26 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 3 மணிக்கு அபிஷேகம் மாலை 6 மணிமுதல் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் ஜனன சிறப்பு பூஜை நடைபெறும். செப்பம்பர் 16 திங்கட்கிழமை அன்று கோயில் வளாகத்தில் உரியடி உற்சவ திருவிழா நடைபெறுகிறது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment