நீலகிரி மாவட்டம் உதகைக்கு உட்பட்ட முத்தோரை பாலாடா அடுத்து வி பி என் எனும் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் நேற்றைய தினம் தமிழக அரசின் உத்தரவுக்கு இணங்க பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு செய்யப்பட்டது. பள்ளியின் வளர்ச்சிக்காக செய்யப்பட்ட இந்த கூட்டத்தில் புதிய தலைவராக மொட்டோரை பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி தலைவராகவும் வி பி என் பகுதியை சேர்ந்த ஷேர் முகமது துணைத் தலைவராகவும் ஒருங்கிணைப்பாளர்களாக தலைமை ஆசிரியர் துரை மூர்த்தி மற்றும் ஆசிரியர் பிரதிநிதியாக ரவி கல்வியாளர் சுந்தரம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதியாக யாமினி மற்றும் செந்தில் உட்பட 20 உறுப்பினர்களும் மறுக்கட்டமைப்பு கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முன்னதாக என்சிசி முதன்மையாளர் சுப்பிரமணியன் வரவேற்றார் முடிவில் சசி பூசன் நன்றி கூறினார். சிறப்பு பார்வையாளராக ஆசிரியர் கண்ணன் செயல்பட ஆசிரியர்கள் நளினாஸ்ரீ சுஜாதா சரவணன் சக்தி கிருஷ்ணராஜ் இந்திராணி மகாலட்சுமி என பள்ளிவாசிரியர்கள் கலந்து சிறப்பித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment