நீலகிரி மாவட்டம் குன்னூர் டவுன் மிகவும் அடர்த்தியான பகுதியாகும் உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் வாகனங்கள் பார்க்கிங் வசதி குறைவு காரணமாக அவதியுற்று வந்தது. இந்த நிலையில் புதியதாக பொறுப்பேற்ற நீலகிரி மாவட்ட ஆட்சியர் திருமதி.லஷ்மி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் குன்னூர் டவுனில் ஆய்வுசெய்து மார்க்கெட் அருகில் உள்ள உபயோகத்தில் இல்லாத பழமையான திரையரங்க வளாகத்தில் மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைக்க முடிவெடுத்து தமிழக அரசால் ரூபாய் 12 கோடி மதிப்பீட்டில் மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைப்பதற்க்கான பணிதுவங்கியது குன்னூர் பகுதியில் பொதுமக்கள் வியாபாரிகள் மற்றும் சுற்றுலா பயணிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment