உதகமண்டலம் சமூக சேவை சங்கம் சார்பில் கோல்பின் திட்டத்தில் மூலம் கிராம மேம்பாட்டு குழுவின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு உதகை சமூக சேவை சங்க இயக்குனர் ஜான் ஜோசப் தனீஸ் தலைமை தாங்கினார்.திட்ட அமைப்பாளர் சுப்பிராபா, கோல்பின் திட்ட ஒருங்கிணைப்பாளர் சந்திரா ஆகியோர் பயிற்சியின் நோக்கம் குறித்து விளக்கம் அளித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது கிராம மேம்பாட்டு குழுக்கள் உருவாக்குவதன் மூலம் பொருளாதார, மற்றும் சமூக மேம்பாட்டுக்கு உதவுகிறது. அந்தந்த கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அரசிடம் கேட்டு பெற முடியும். உள்ளூர் வளங்களை, உள்ளூர் மக்கள் பயன்படுத்தி கொண்டு சுயசார்பு பொருளாதார மேம்பாடு பெற வேண்டும். அரசு செய்து தரவேண்டிய தேவைகள் குறைபாடுகள் இருப்பின் இக்குழு மூலம் சம்பந்தபட்ட துறைகள் கவனத்துக்கு கொண்டு சென்று அதற்கு தீர்வு காண வேண்டும். இயற்கை விவசாயம், கால்நடை வளர்ப்பு, சுயதொழில், கைத்தொழில், ஆகியன மேற்கொண்டு உள்ளூர் அளவில் தங்களை மேம்படுத்தி கொள்ள வேண்டும். அங்கன்வாடி, அரசு பள்ளிகள், சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட வசதிகளை கண்காணித்து சரியான செயல்பாட்டை உருவாக்குவது அவசியம் என்றார்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய துணை தலைவர் ராஜா பேசும்போது கைவினைப் பொருட்கள் செய்து எளிய முறையில் லாபம் நீட்ட முடியும். உள்ளூர் அளவில் கிடைக்கக்கூடிய மூங்கில் மற்றும் இதர பொருட்களை கொண்டு அழகிய வடிவிலான கைவினைப் பொருட்கள் செய்து தர முடியும். மேலும் கைவினை பொருட்கள் குறித்து சமூக ஊடகங்கள் மூலமாகவும் விளம்பரங்கள் செய்து வருவாய் ஈட்டி கொள்ள முடியும் என்றார்.
சமூக ஆர்வலர் ஆபித் பேசும்போது வன உரிமை சட்டபடி வனத்தில் உள்ள வளங்களை பயன்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால் நாம் உரிமைகள் தெரியாமல் விட்டு கொடுக்கின்றோம். அதுபோல் சாதாரண சிறு குறு தொழில்களை செய்வதை தவிர்த்து வருகின்றோம். குழுவாக இணைந்து செயல்பட்டு உரிமைகளை தெரிந்து கொண்டு வளங்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்..
நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மகளிர் குழுவினர் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.மசினகுடி பகுதி ஒருங்கிணைப்பாளர் அமுதா நன்றி கூறினார்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment