உதகை அரசு பள்ளியில் கருத்தரங்கு மற்றும் பேரிடர் மேலாண்மை பயிற்சி - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 22 August 2024

உதகை அரசு பள்ளியில் கருத்தரங்கு மற்றும் பேரிடர் மேலாண்மை பயிற்சி


தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக உதகை அரசு மேல்நிலைப் பள்ளியில் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை குறித்து  கருத்தரங்கு மற்றும் பயிற்சி  நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு  அரிமா சங்கம் கிங்ஸ் வீடியோ ஃபுல் எடுத்த நிர்வாகி  திரு. மணிவண்ணன்  அவர்கள் தலைமை வகித்தார் சிறப்பு கருத்தாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர் ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு .கே .ஜே .ராஜு அவர்கள் தமது உரையின் போது கூறிய கருத்துக்கள் ........



 காலநிலை மாற்றம் என்பது சுமார் 30 ஆண்டு  ஏற்பட்டுள்ள தட்பவெட்ப மாறுபாடு தான் காலநிலை மாற்றம் என அறியப்படுகிறது. கடந்த 150 ஆண்டுகளில் ஏற்பட்ட தொழில் புரட்சியின் காரணமாக பூமியினுடைய பசுமை குடில் வாயுவின் அளவு பூமியின் தாங்கு திறனை விட பல மடங்கு அதிகமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பூமியின் வெப்பநிலை ஒரு டிகிரிக்கு மேலாக அதிகரித்துள்ளது நமக்கு காய்ச்சல் வரும்போது நமது உடலின் வெப்பநிலை ஒரு டிகிரி சென்டிகிரேட் அதிகரிக்கும் காய்ச்சல் வந்தால் நாம் என்ன பாடு படுகிறோம் என்று நமக்குத் தெரியும் தற்போது பூமியின் வெப்பநிலை அதிகரிப்பால் பூமிக்கும் காய்ச்சல் வந்துள்ளது நமக்கு காய்ச்சல் வந்தால் மருத்துவர்கள் இருக்கிறார்கள். பூமிக்கு வைத்தியம் பார்க்க எந்த மருத்துவர்கள் இருக்கிறார்கள். நாம் வாழ்வதற்கு இருக்கும் ஒரே கோள் இந்த பூமி தான் இந்த பூமிக்கு எங்கும் கிளைகள் இல்லை. நம் முன்னோர்கள் நமக்கு கொடுத்த இந்த பூமியை நம் வருங்கால சந்ததியினருக்கு கொடுக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும். வளர்ச்சி என்ற பெயரில் மனித குலம் இயற்கையை சூறையாடி வருகிறது. இதனை தவிர்க்காத பட்சத்தில் இயற்கை நம்மை திருப்பித் தாக்கும் இதைத்தான் நாம் அண்மையில்  ஏற்பட்ட பேரிடர்களில் இருந்து அறிகிறோம். இனிமேல் பூமியில் அதிக அளவு புயல்களின் எண்ணிக்கையும் வெள்ளப்பெருக்கும் வெப்ப அலைகளும் வரட்சியும் தொற்று நோய்களின் பெருக்கமும் நம் அன்றாட வாழ்வாக போகிறது இந்த பூமியை காக்க நாம் போர்க்கால அடிப்படையில் ஏதாவது செய்தாக வேண்டும் என்பன போன்ற பல கருத்துக்களை ஆசிரியர் திரு. ராஜு அவர்கள் கூறினார். விஞ்ஞானி திரு. ஜனார்த்தனன் அவர்கள் தமது உரையின் போது பறவைகளுக்கும் காலநிலை மாற்றத்திற்கும் உள்ள தொடர்பினை விளக்கி கூறினார் அமெரிக்காவின் ஒரு பகுதியில் ஒரு வண்ணத்துப் பூச்சியின் சிறகடிப்பு அடுத்த பாடல் மற்றொரு பகுதியில் பெரும் புயலாக உருவெடுக்கும். இயற்கை ஒரு சிக்கல் ஆன அமைப்பாகும். 



இதனைப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்பன போன்ற பல கருத்துக்களை கூறினார். பின்னர் குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் திரு. மனோகரன் அவர்கள் பேசும்போது காலநிலை மாற்றத்திற்கு முக்கிய காரணம் நமது நுகர்வு கலாச்சாரமே. நாம் தேவையில்லாமல் வீடுகளில் வாங்கி குவித்து வைத்திருக்கும் துணிமணிகள் அனைத்தும் இயற்கையை சூறையாடியதால் உருவானவை. கடந்த ஆண்டு இந்தியாவில் 20 மில்லியன் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன இந்தியாவில் இத்தனை கார் கம்பெனிகள் குவிந்து இருப்பதற்கு காரணம் மக்களின் பேராசையும்  இயற்கை குறித்த புரிதல் இல்லாத அறியாமையுமே காரணமாகும் என்பன போன்ற பல கருத்துக்களை கூறினார்.  தமிழ்நாடு தேசிய பசுமை படை திட்டத்தின் நீலகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நெஸ்ட் அறக்கட்டளையின் அறங்காவலர் திரு. சிவதாஸ் அவர்கள் பேசும் போது மரம் நட்டு இயற்கையை பாதுகாப்பதை தவிர நமக்கு வேறு விமோசனம்  இல்லை. என்பதைப் போன்ற பல கருத்துக்களை கூறினார் பின்னர் நடைபெற்ற தமிழ்நாடு தீயணைப்புத்துறையினரின் பேரிடர் மேலாண்மை குறித்த பயிற்சி முகாம் மாணவர்களிடையே பேர் ஆர்வத்தை தூண்டியது. வீடுகளில் கேஸ் அடுப்பில் திடீரென தீப்பிடித்தால் எவ்வாறு அணைக்க வேண்டும். மின்சாரத்தை தொடும் போது  எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது போன்ற பல செய்திகளை கூறினார்கள். இளம் விஞ்ஞானி திரு. ஜனார்த்தன் அவர்கள் காலநிலை மாற்றத்தை ஒலி ஒளி வடிவில் மாணவர்களுக்கு விளக்கினார் தீயணைப்பு படையில்  உதகை நிலைய அதிகாரி திரு.  ஸ்ரீதர் அவர்கள் தலைமையில் மாணவர்களுக்கு  பல பயிற்சிகள் வழங்கப்பட்டது முன்னதாக அரிமா சங்க செயலர் திரு . சிவா அவர்கள் அனைவரையும் வரவேற்றார்  எப்ப நாடு பள்ளி ஆசிரியர் திரு. பாலா அவர்கள் நன்றி கூறினார்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad