நீலகிரி மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் தங்களது அரசுப்பணியை மேற்கொள்ள லஞ்சம் கேட்டால் ஊழல் தடுப்பு, கண்காணிப்புத் துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் எம்.சுபாஷினி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘‘தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநர் உத்தரவுப்படி, நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், உள்ளாட்சித் துறை மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் தங்களது அரசுப் பணியை மேற்கொள்ள லஞ்சமாக பணம் கேட்டால், நீலகிரி மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புத் துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் எம்.சுபாஷினி 94981 90735, ஆய்வாளர் பீ.கீதாலட்சுமி 94981-76712, உதகை அலுவலகம் 0423-2443962 ஆகிய தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த எண்களிலும், dspvacooty@gmail.com, dspnigdvac.tnpol@nic.in ஆகிய மின்னஞ்சல்களிலும் லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான புகார்களைமக்கள் அளிக்கலாம்’’ என்று குறிப்பிட்டுள்ளார்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத்
கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment