உதகையில் காவல்துறையில் பணிபுரியும் காவலர்களின் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்ல காவல் வாகனம்... நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ் நிஷா கடந்த செவ்வாய் கிழமை துவக்கி வைத்தார்...
நீலகிரி மாவட்ட காவல் துறையில் பணிபுரியும் காவலர்கள் புதுமந்து உதகை நகரம் உள்ளிட்ட பகுதிகளில் காவலர்கள் குடியிருப்பு உள்ளது.
காவலர்களின் குழந்தைகள் பல்வேறு பள்ளிகளில் பயின்று வருகின்றனர். இவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையிலும், குறிப்பிட்ட நேரத்தில் பள்ளிக்கு செல்லும் வகையில் காவலர் குடியிருப்பு பகுதியில் இருந்து காவலர்களின் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லவும், பள்ளி முடிந்தவுடன் மீண்டும் வீட்டிற்கு அழைத்து வரவும் ஆயுதப் படையில் இருந்து காவலர் வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இன்று புதுமந்து 120 காவலர் குடியிருப்பு பகுதியில் இருந்து 50 மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அழைத்துச் செல்ல காவலர் வாகனத்தை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் என்.எஸ் நிஷா இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.
துவக்கி வைத்து பேசிய அவர், பள்ளிக்கு குறிப்பிட்ட நேரத்தில் சென்று கல்வி பயிலும் வகையில் இந்த வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், பள்ளி மாணவ, மாணவிகள் பாதுகாப்புடன் வாகனத்தில் செல்ல வேண்டும் என அறிவுரை கூறினார்.
இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் தங்கவேல், சௌந்தரராஜன், ஆயுத படை பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சரவணன் மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட புகைப்படக் கலைஞர் என். வினோத் குமார்
No comments:
Post a Comment