நீலகிரி -கிழங்கு பயிர் பராமரிப்பில் விவசாயிகள் நல சங்க தலைவர் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 7 August 2024

நீலகிரி -கிழங்கு பயிர் பராமரிப்பில் விவசாயிகள் நல சங்க தலைவர்



நீலகிரி மாவட்டத்தில் விளையும் உருளைக் கிழங்கு விலை ரூபாய் 100 வரை விற்பனை ஆகிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தனது விவசாய நிலத்தில்  பயிர்செய்து 50 நாட்கள் ஆன உருளைக்கிழங்கு பயிர் பராமரிப்பில் ஈடுபட்ட விவசாயியான நீலகிரி மாவட்ட விவசாயிகள் நல சங்கத்தின் தலைவர் இளித்துரை திரு. N. விஸ்வநாதன் அவர்களை சந்தித்தோம் நீலகிரி மலை காய்கறிகள் பற்றி அவரது கருத்தை கேட்டபோது...

நீலகிரி மாவட்ட விவசாயிகள் இடுபொருட்கள் விலை உயர்வு, வன விலங்குகளின் தொல்லை, விவசாய பணியாளர்கள் தட்டுப்பாடு, கூலி உயர்வு , இயற்கை சீற்றம் ஆகிய பல இன்னல்களை சந்தித்து மலை காய்கறிகள் விவசாயம் செய்து வருகிறோம்.  இயற்கை விவசாயமுறையில் பயிர் செய்வதால் நீலகிரி மலை காய்கறிகள் மருத்துவகுணம் கொண்டதாக இருப்பதாலும் தற்போதைய விலை உயர்வு மகிழ்ச்சிஅளிக்கிறது தான் விவசாயிகள் வளர்ந்தால் தான் வியாபாரிகளும் வளர முடியும் ஆகையால் வியாபாரிகள் விவசாயிகளுடன் துணை நின்று அடிமாட்டு விலைக்கு செல்லாமல் கட்டுப்படுயாகும் விலை பெற்றுத்தர வேண்டும் என கூறினார்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad