நீலகிரி - விழிப்பணர்வு வெளியிட்ட தன்னார்வலர். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 7 August 2024

நீலகிரி - விழிப்பணர்வு வெளியிட்ட தன்னார்வலர்.


நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வயநாடு போல் நீலகிரி என தகவல் பரவிவருகிறது. 

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அவர்கள் அது வதந்தி நம்பவேண்டாம் என கூறிவரும் நிலையில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கன்னேரிமுக்கு ஹட்டியை சேர்ந்த தன்னார்வலர் திரு. வேணுகோபால் தர்மலிங்கம் அவர்கள் ஒரு விழிப்புணர்வு பிரச்சார  காணொலியை வெளியிட்டுள்ளார்.....


நீலகிரிக்கு  நிலச்சரிவு எச்சரிக்கை பல காலத்திற்க்கு முன் விடுக்கப்பட்டதாகவும்  அரசு தலையிட்டு வருமுன் காப்பதற்க்கான நடவடிக்கையில் இறங்கவேண்டும் முதல் நாளில் முப்பதாவது நாள் இப்படி நடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது அதைப்பற்றி கவலைபடாமல் 29 ஆம் நாளில் அபாயம் என கூறுவதில் எந்த பிரியோஜனமும் இல்லை காடுகள் நதிகள் வரைமுறை போல் கட்டிட வரைமுறை அவசியம் என்றும் தன்னார்வலர்கள் பல முறை உலக அளவில் நீலகிரி பற்றி விவரித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல்  ஆராய்ச்சி அறிக்கையை கிடப்பில் போடப்பட்டுள்ளது என்றும் இனியும் விழிக்காவிட்டால் அடுத்த நிலையை சந்திக்கவேண்டிவரும்  என  விழிப்புணர்வு அறிக்கை வெளியிட்டுள்ளார்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad