நீலகிரி மாவட்டம் உதகை ஊரகம் பகுதிக்கு உட்பட்ட நஞ்சநாடு அரசு உயர்நிலை பள்ளியில் இன்று (12-08-24 ) நீலகிரி மாவட்ட உதகை ஊரகம் காவல் நிலையம் சார்பாக போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு முகாமில் காந்தல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவக்குமார் அவர்கள் தலைமை தாங்கி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அறிவுரை வழங்கினார் மற்றும் நஞ்சநாடு உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மூர்த்தி அவர்களும் மாணவர்களுக்கு விழிப்புணர்வை பற்றி அறிவுரை கூறினார்.
காவல்துறை நண்பர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் உடன் பள்ளி ஆசிரியர்கள் இணைந்து எட்டாம் வகுப்பு மாணவ மாணவிகள் முதல் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளை ஒன்று கூட்டி நஞ்சநாடு பள்ளியிலிருந்து அருகிலுள்ள நரிகுளி ஆடா எனும் பகுதிக்கு சென்று மக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்தனர். இவர்களுடன் NCC ஆசிரியர் சுப்பிரமணி மற்றும் பள்ளியில் பணிபுரியும் ரவி, முத்துக்குமார் ஆசிரியர் ஆகியோர் உடன் இருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment