நீலகிரி மாவட்டம் *கோத்தகிரி அருகே உள்ள, லில்லியட்டி கிராமத்தில்,* குடியிருக்கும் வீட்டின் அருகே *மிகவும் ஆபத்தான, கீழே விழும் நிலையில் உள்ள மரங்கள்.*
இது சம்பந்தமாக வருடக் கணக்கில், கிராம நிர்வாக அலுவலர், வட்டாட்சியர்கள், கோட்டாட்சியர்கள், வனத்துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர்கள், கோத்தகிரி ஆய்வாளர், உதவி ஆய்வாளர், வனச்சரக அலுவலர் *ஆகியோருக்கு குடியிருப்பு வாசிகள் மற்றும் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து சார்பாகவும் புகார் கொடுத்தும்,* பொதுமக்களின் பாதுகாப்பிற்கு *எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை,* எந்த பிரயோஜனமும் இல்லை என கூறப்படுகிறது.
இனியாவது *சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம், பொதுமக்களின் பாதுகாப்பை கருதி,* உயிர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வண்ணம், அந்த ஆபத்தான மரங்களை அப்புறப்படுத்த, *உடனடி நடவடிக்கை எடுத்து தீர்வு காணுமா?* என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்புகின்றனர்
தமிழக குரல் கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment