நீலகிரி மாவட்டம் உதகை
நகராட்சி மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைப்பெற்று கொண்டிருந்த நேரத்தில் அ.இ.அ.தி.மு.க நகரமன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதி வார்டுகளில் உள்ள பணிகளை மேற்கொள்ள நகராட்சியில் இருந்து எந்தவித ஒத்துழைப்பும்
கிடைப்பதில்லை எனக்கூறி இன்று நகராட்சி அலுவலக வாயிலில் மேசைகள் அமைத்து மாதிரி நகரமன்ற கூட்டத்தை நடத்தினர் இதில் 12வது வார்டு உறுப்பினர் அக்கிம்பாபு தலைமையில் 15வது வார்டு உறுப்பினர் அன்பு செல்வன்,
8 வது வார்டு உறுப்பினர் லயோலா குமார் 28வது வார்டு உறுப்பினர் தனலட்சுமி ஜெயராமன் 33வது வார்டு உறுப்பினர் சகுந்தலா,3வது வார்டு உறுப்பினர் ஜெயலட்சுமி,
19வது வார்டு உறுப்பினர் ஸ்ரூதி கிருஷ்ணா ஆகியோர் கலந்து கொண்டு மாதிரி நகரமன்ற கூட்டத்தை நடத்தினர்.
இப்படித்தான் அனைத்து மாதங்களிலும் கூட்டம் மட்டும் நடைபெறுகிறது எந்தவித பணிகளும் நடைபெறுவதில்லை வடையுடன் டீ தரப்படுகிறது ஆளும்கட்சி உறுப்பினர்களின் வார்டுகளில் மட்டும் பணி நடைபெறுகிறது மற்ற கவுன்சிலர்களின் வார்டு பணிகள் புறக்கணிக்கப்படுகிறது. என மாதிரி நகர்மன்ற கூட்டம் நடத்தி தங்களது எதிர்ப்பை பதிவுசெய்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment