கேரள மாநிலம் வயநாடு பகுதியில் பேரிடரின் கோரத்தாண்டவத்தால் அதிகப்படியான மக்கள், அதிகப்படியான பொருள் சேதமும் ஏற்பட்டது அனைவரும் அறிந்ததே...
இதில் ராணுவ வீரர்கள்,மீட்பு குழுவினர்,பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அங்கு தங்களால் இயன்ற பொருள் உதவிகள் மற்றும் களப்பணியும் சிறப்பாக செய்து வருகின்றனர்.
இந்நிலையில் 07/08/2024 புதன்கிழமை அன்று குன்னூரிலிருந்து அப்துல் கலாம் நினைவு அறக்கட்டளையின் நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து அங்கு தங்களால் இயன்ற களப்பணியை செய்து வந்த நிலையில் புத்து மலை என்னும் பகுதியில் சுமார் 6 உடல்களை அடையாளம் தெரியாத உடல் பாகங்களை இறுதி சடங்கு செய்து நல்லடக்கம் செய்ய கேரளா அரசு அதிகாரிகள், சமூக ஆர்வலர்களும் *அப்துல் கலாம் நினைவு அறக்கட்டளை* நிர்வாகிகளும் காவல்துறையினரின் இறுதி மரியாதையுடன் அனைவரும் உறவோடு உறவாக இருந்து இறுதி சடங்கு செய்து அடக்கமும் செய்தது மன நெகிழ்வை ஏற்படுத்தியது....
தமிழக குரல் செய்திகளுக்காக கோத்தகிரி தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment