அவ்வூர் தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலான்மை கமிட்டி மறு கட்டமைப்பு கூட்டம். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 17 August 2024

அவ்வூர் தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலான்மை கமிட்டி மறு கட்டமைப்பு கூட்டம்.



நீலகிரி மாவட்டம் கீழ்கோத்திகிரி அருகே உள்ள அவ்வூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளி மேலாண்மை கமிட்டியின் மறு கட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் திரு. ரவிக்குமார் அவர்கள் தலைமை தாங்கினார்.முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திரு. பன்னீர்செல்வம் மற்றும் புனிதா ஆகியோர்  முன்னிலை வகித்தனர்


 தற்போதைய தலைவர் திரு. சண்முகநாதன் வாழ்த்துரை வழங்கினார். பின்னர் நடைபெற்ற தேர்வில் திருமதி. கற்பகம் தலைவராகவும் திருமதி. சுலோச்சனா துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் அல்லாமல்  24 நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர் ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு. கே .ஜே .ராஜு மாவட்ட நிர்வாகத்தின் பார்வையாளராக பங்கேற்றார். முன்னதாக ஆசிரியர் திரு. நல்லமுத்து அனைவரையும் வரவேற்றார். மகேஸ்வரி நன்றி உரை வழங்கினார்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad