நீலகிரி மாவட்டம் குன்னூரில் செல்போனை பார்த்துக்கொண்டே சாலையை கடந்த பெண் மீது இருசக்கர வாகனம் மோதியதில் அவர் தூக்கிவீசப்பட்டார்.இந்த காட்சி அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசி டிவியில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வள்ளி என்ற அந்தபெண்ணை மீட்டு பொதுமக்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் எவ்வளவோ விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தும் இதுபோன்ற மக்களின் அலட்சியத்தால் விபரீதம் ஏற்படுகிறது. மக்கள் விழிப்புடன் இருக்க தன்னார்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K .A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment