உலக யானைகள் தினம் என்பது நிலத்தில் உள்ள பேருயிரின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, அவற்றை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துக்கூறுவது இந்த நாளின் நோக்கம் ஆகும்.யானைகளின் வாழிடம் குறைவு, அதன் தங்களுக்கு உள்ள கள்ளச்சந்தை, மனித – யானை மோதல், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள், இந்த பேருயிரை இந்த நிலத்தில் தக்கவைப்பதன் முக்கியத்துவம் என இந்த நாளில் பல்வேறு பிரச்னைகளை அலசுவதும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இந்த நாளின் நோக்கமாகும். யானைகள் பாதுகாப்பு மற்றும் அவற்றின் நலன் ஆகியவை குறித்த முன்னெடுப்புகள் இந்த நாளில் செய்யப்படுகிறது.உலக யானைகள் தினத்தின் இந்தாண்டு கருப்பொருள் ‘வரலாற்றுக்கு முந்தைய அழகு, சுற்றுச்சூழல் முக்கியத்துவம், இறையியல் தொடர்பு என்பதை உருவகப்படுத்துவது இந்த நாளின் நோக்கம் ஆகும்.
இந்த கருப்பொருள், யானைகளின் இயற்கை வாழிடங்களை பாதுகாத்து அவற்றின் இருப்பை உறுதிப்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுப்பதை அடிக்கோடிட்டு காட்டுவதாகும். யானைகள் வழிடத்தை பாதுகாப்பதன் முக்கிய காரணிகள் என்னவென்பதை இந்த நாள் முன்னிலைப்படுத்துகிறது.
குறிப்பாக யானைகளின் எண்ணிக்கை குறைந்துவரும் இந்த காலகட்டத்தில் அதன் முக்கியத்துவம் என்னவென்பதை வலியுறுத்துவது அவசியம். வாழிடங்களை பாதுகாப்பது, யானைகள் வாழும் சூழலை உருவாக்குவது, அவற்றின் எதிர்கால சந்ததிகளுக்கு வாழ்வதாரத்தை உறுதி செய்வது இந்த கருப்பொருளின் அர்த்தம் ஆகும்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக சிறப்பு செய்தியாளர் தீனதயாளன்.
No comments:
Post a Comment