தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதி மொழிக் குழுத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் முன்னிலையில் நேரில் ஆய்வு மேற்கொண்டு, மக்களைத் தேடி மருத்துவத் திட்டம் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதற்கு பாராட்டுக்களை தெரிவித்தனர்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதி மொழிக் குழுத்தலைவர் திரு.வேல்முருகன் மற்றும் உறுப்பினர்கள் உதகை அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியினை நீலகிரிமாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா இ.ஆ.ப அவர்கள் முன்னிலையில், நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள் மற்றும் அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதி மொழிக் குழுத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நகராட்சிக்குட்பட்ட காந்தள் பகுதியிலுள்ள நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தினை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அங்குள்ள மாணாக்கர்களிடம் கலந்துரையாடினார்கள்.
தமிழ குரல் இணைய தளம் செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C .விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment