மான் கொம்புகள் மற்றும் தோட்டத்தில் மீன் துண்டுகளுக்கு விஷம் தடவி வைத்திருந்த நபர் கைது - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 22 August 2024

மான் கொம்புகள் மற்றும் தோட்டத்தில் மீன் துண்டுகளுக்கு விஷம் தடவி வைத்திருந்த நபர் கைது




 எமரால்டு அண்ணா நகர் பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவர் மான் கொம்புகள் மற்றும் தோட்டத்தில் மீன் துண்டுகளுக்கு விஷம் தடவி வைத்திருந்த குற்றம் காரணமாக கைது செய்யப்பட்டார்


நீலகிரி மாவட்டம் உதகைக்கு உட்பட்ட எமரால்டு அண்ணா நகர் பகுதியில் ஊர்  பொது மக்கள் தகவலின் அடிப்படையில் வன அதிகாரிகளுடன் சதீஷ்  என்பவரின் தோட்டத்திற்கு  சென்று  அதிரடியாக சோதனை  செய்ததில் சதீஷ் என்பவரின் கேரட் தோட்டத்தில் எலி தொல்லையின் காரணமாக மீன் துண்டுகளுக்கு விஷம் தடவி வைத்திருந்ததும் அதனால் நான்கு நாய்கள் இறந்து இருந்ததும் விசாரணை செய்து உறுதிசெய்யபட்டது. இதனால் வனவிலங்குகள் அதனை உட்கொள்ள நேரிடும் அபாயகரமான நிலை உள்ளதாலும் இச் செயலானது வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972 ஈர்க்கும் வகையில் உள்ளதால் மாவட்ட வன அலுவலர் உத்தரவின் படி உதவி வனபாதுகவலர், வனசரகர அலுவலர் மற்றும் வனபணியாளர்கள் முன்னிலையில் வாக்கு மூலம் பெற்று வன உயிரின வழக்கு WLOR சட்டம் படி நாள் 21/08/2024 வழக்கு பதிவு உதகை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நநீதிமன்ற அடைப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி அவரிடம் இருந்து மான் கொம்புகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் வனத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad