கேரளா மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவின் போது சிக்கியவர்களுக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றியதற்கு வீர தீர செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருது பெற்ற செவிலியர் சபீனாவிற்கு அவரது சொந்த ஊரான கூடலூரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது ....
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 29ஆம் தேதி நள்ளிரவில் ஏற்பட்ட கோர நிலச்சரிவின் போது அதில் படுகாயம் அடைந்தவர்களுக்கு கூடலூர் சேர்ந்த செவிலியர் சபீனா என்பவர் ஜிப்லைன் மூலம் சென்று முதுலுதவி சிகிச்சை அளித்தார் அவரின் இச்செயலுக்காக பாராட்டுக்கள் குவிந்த நிலையில் தமிழக அரசு சார்பில் வீரதீர செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருதை சுதந்திர தின விழா அன்று தமிழக முதல்வர் வழங்கினார்.
இதையடுத்து சென்னையில் இருந்து சொந்த ஊரான கூடலூருக்கு செவிலியர் சபீனா நேற்று வருகை புரிந்தார் அப்போது கூடலூர் நகர செயலாளர் லியகத்தலி தலைமையில் அவருக்கு ஏராளமான பொதுமக்கள் முஸ்லீம் லிக் கட்சி தொண்டர்கள் மாலை அணிவித்து பூக்கள் தூவி வரவேற்பு அளித்தனர் தான் செய்த பணிக்கு இவ்வளவு பாராட்டுக்கள் கிடைக்கும் என நினைத்துப் பார்க்கவில்லை தமிழக முதல்வரிடம் கல்பனா சாவ்லா விருது பெற்றது தனக்கு பெருமையாக உள்ளது என செவிலியர் சபீனா கூறினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment