நீலகிரி மாவட்டத்தில் ஆடி மாதம் 3ம் வெள்ளிக்கிழமை முன்னிட்டு அம்மன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றது. விடியற்காலை ஐந்து மணி முதல் சிறப்பு பூஜைகள் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஏராளமான பெண்கள் கோயில்களுக்கு சென்றுகொண்டிருக்கின்றனர். பகல் வேளையில் பிரசித்திபெற்ற கோயில்களில் விளக்கு பூஜை நடைபெறுகிறது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி திம்பட்டி எட்டூர் காளியம்மன் கோயிலில் சுமங்கலி பூஜை நடைபெற்றது.
கோயில் திருப்பணியும் நடந்துகொண்டிருக்கிறது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment