நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட( inter school zonal level) கால்பந்து போட்டி உதகை சென் ஜோசப் பாய்ஸ் ஹையர் செகண்டரி பள்ளியில் நடைபெற்றது . இப் கால்பந்து போட்டியில் பல பள்ளிகள் கலந்து கொண்டு விளையாடினார்கள். இறுதிப் போட்டியில் உதகை அரசினர் மேல்நிலைப் பள்ளியும், உதகை சாந்தி விஜயா பெண்கள் மேல்நிலைப் பள்ளியும் மோதினர்,
விறுவிறுப்பான இப் போட்டியில் 3/1 என்ற கோல் கணக்கில் சாந்தி விஜயா பெண்கள் மேல்நிலைப் பள்ளி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பள்ளித் தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியை ஆசிரியைகள் சிறப்பான வரவேற்பு கொடுத்து அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட புகைப்பட கலைஞர் என். வினோத்குமார்.
No comments:
Post a Comment