30 ஆகஸ்ட் 2024 அன்று JCI இந்தியவின் தேசிய தலைவர் JFS Adv. CR ரேகேஷ் சர்மா இந்தியா மண்டலம் -17ன் ஓரங்கமாகிய நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரிந்து அதிகாரப்பூர்வ சுற்று பயனம் மேற்கொண்டார்.
அவருக்கு JCI நீலகிரி சார்பில் ஐந்து அடுக்க சிறப்பு வரவேற்பு வழங்கப்பட்டது.
ஏழு JCI கொடி ஏந்திய நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் ஐந்து JCI கொடி ஏந்திய இருசக்கர வாகனங்களுடன் மேலத்தளங்களுடன் வாகனம் அணிவகுத்து வந்தது, மேல தாளங்களுடன் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்களுடன் குன்னூர் கிளப்புக்கு வருகை புரிந்த தேசிய தலைவருக்கு கிராண்ட் மர்சன் நேவி ஸ்குவாட் சல்யூட் வரவேற்பு அளிக்கப்பட்டு அதைத் தொடர்ந்து ராஜ கம்பீர அலங்காரத்துடன் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டு இரத்தினக் கம்பளம் ஆரவாரத்துடன் பெரும் ஆட்டம் பாட்டங்களுடன் JCI ஊட்டி, JCI குன்னூர், JCI கோத்தகிரி NAWA குழு, JCI கூடலூர் மற்றும் புதிதாக துவங்கப்பட்ட JCI குன்னூர் ஹில்ஸ் ஸ்பார்க்ஸ் ஆகியவற்றின் தலைவர்களுடன் ரத்தின கம்பளத்தில் விழா மேடைக்கு அளங்கார குடை சூழ அணிவகுத்து வந்தார்.
JCI நீலகிரி தலைவர்கள் பல்வேறு ஆக்கப்பூர்வமான திட்டங்கள் காட்சிப்படுத்தினர்.
JCI தேசியத் தலைவர் மற்றும் மண்டல 17 தலைவர் JFS அசோக் பட் இணைந்து சமாதானத்தின் சின்னமான புறாக்களை பறக்க விட்டனர்.
இந்த விழாவிற்கு குன்னூர் JCI செனட்டர் பொறியாளர் விஜயகாந்த் முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
இவ்விழாவின் முக்கிய அம்சமாக JCI குன்னூர் ஹில்ஸ் ஸ்பார்க்ஸ் இன் நீலகிரி சமூக வளர்ச்சி திட்டங்களான
QR கோடு டூரிஸ்ட் மேப் இத்திட்டத்தினை பயண்படுத்தி கடந்த மூன்று மாதங்களில் மட்டும் இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குறித்த இடத்திற்கு செல்ல QR கோடு மேப்பை உபயோகித்து குறிப்பிட்ட சுற்றுலாத்தலங்களை அடைந்துள்ளனர் என்று குறிபிட்டார்.
மனிதர்கள் மற்றும் வன விலங்குகள் இடையேயான மோதலை தடுக்கும் வண்ணம் சோலை காடுகளை மீட்டெடுக்கும் முயற்சியாக விதைப்பந்துகள் மூலம் சோலை காடுகள் செழிப்பு எடுப்பதற்காக விதைப்பந்துகளை தூவும் திட்டம்.
ஆயிரம் மறுசுழற்சிக்கு ஏற்ற குடிநீர் பாட்டில்களுடன் தொழில் தொடக்க உடனடி 6x 6x7 அடி டென்டடு, விளம்பர மேஜை மற்றும் நீர் வினியோகி குழாய்குடம் இலவசமாக கொடுத்திட திட்டமிட்டு திருநங்கைகள் மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஏளை தொழில் முனைவோர்கள் மூலம் குறைந்த விலையில் கொடுக்கவும் அதற்கான குடிநீர் விலை லிட்டருக்கு ஐந்து ரூபாய் ஆகவும் நிர்ணயித்து பயன்பாடுக்கு கொண்டுவரப்பட உன்மை மாடல் வெழியிடபட்டது.
JCI குன்னூர் ஹில்ஸ் ஸ்பார்க்ஸ் இன் அதிகாரப்பூர்வ புல்லட்டின் நியூஸ் லெட்டர் “எலிவேட் யுவர் ப்ரெஸ்பெக்டிவ்” என்ற தலைப்பில் தேசிய இந்தியாவின் தேசிய தலைவர் மூலம் வெளியிடப்பட்டது.
JCI தேசியத் தலைவரால் வனப் பாதுகாப்பை ஊக்குவிக்கும் வகையில் உள்ள சுற்றுச்சூழல் உணர்திறன் புகைப்படச் சாவடி (Eco Photo Booth) திறப்பு, ரிப்பன் வெட்டி வெழியிடப்பட்டது.
முதல்நிலைப் பேரிடர் வீரர்கள் மற்றும் உள்ளூர் சமூகத் தலைவர்களின் அங்கீகாரம் மற்றும் வயநாடு வெள்ள நிவாரண உதவிகளுக்கு JCI இந்திய தேசியத் தலைவர் மற்றும் குன்னூர் தாலுகா தாசில்தார் சால்வைகள் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கி கவுரவித்தனர்.
JCSAT JCI ஸ்காலர் ஆப்டிட்யூட் டெஸ்ட் பேனரை வெளியிட்டு, ரூ. 5,00,000 மதிப்புள்ள பரிசு உதவித்தொகை விருதுகளுடன் வழங்கப்பட உள்ளதை JCI தேசியத் தலைவரால் வெழியிடப்பட்டது.
JCI குன்னூர் ஹில்ஸ் ஸ்பார்க்ஸ்யை சேர்ந்த எட்டு நபர்கள் கொடுத்த 58 ஆயிரம் ரூபாய் JCI பவுண்டேஷன் காண்ட்ரிபியூஷனில் பெரும் பங்காற்றி இருப்பதாக கூறி இத்தொகைக்கு பங்களித்த JC HGF சுரேஷ் மூர்த்தி JC HGF செல்லகுமார் மூர்த்தி JC HGF Adv தினேஷ்குமார் JC HGF பொறியாளர் டேனியல் கிறிஸ்டோபர் JC HGF பொறியாளர் கோவர்தன் ராமசாமி JFM ஸ்ரீகாந்த் முத்துகிருஷ்ணன் JFM கலைவாணி விஜயகாந்த் மற்றும் JCI Senator விஜயகாந்த் முத்துகிருஷ்ணன் ஆகியோரை பாராட்டி தேசியத் தலைவர் JFS Adv CR ரேகேஷ் சர்மா கௌரவப்படுத்தினார்.
JCI நீலகிரி சார்பில் இரண்டு புதிய JCOM டேபிள்கள் பொறுளாதார மேன்பாட்டை கறுத்தில்கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டன குறிப்பாக JCI கூடலூர் சேர்ந்த JCOM L கூடலூர் 1.0 மற்றும் JCI குன்னூர் ஹில்ஸ் ஸ்பார்க்ஸ்யை சேர்ந்த JCOM L நீலகிரி 1.0 என்னும் லைவ் டேபிள்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
JCI கூடலூரின் தலைவர் JFM டீ ஸ்டில்லின் அவர்களின் பேராதரவுடன் JCI கூடலூர் ராயல் கேர் என்ற புதிய ஜேசியை அமைப்பு கூடலூரில் துவங்கப்பட்டது அதன் நிறுவனத் தலைவராக JC பிரகாஷ் பதவி அறிமுகபடுத்தபட்டார்.
இந்நிகழ்வுகளை நீலகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு JC Sen இன்ஜினியர் டி பிரசாந்த் அவர்கள் வழிகாட்டுதலுடனும் JCI இந்தியா மண்டல 17 இன் சுற்றுப்பயண இயக்குனர் JC HGF அருசுல்லா அவர்களின் ஆதரவுடனும் குறிப்பிடத்தக்க விருந்தினர்களான குன்னூர் தாலுகா தாசில்தார் திரு கனிசுந்தரம் அவர்கள் ரோட்டரி நீலகிரிஸ் தலைவர் திரு சுனில் கோயில் நீலகிரி பொறியாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் திரு கிறிஸ்டோபர் திலக்குமார் சிட்டிசன் ஃபார்ம் ஆஃப் குன்னூரில் முந்தைய தலைவர் திரு ஜெபரத்தினம் தலைமைச் செயலக பத்திரிக்கையாளர் மாநில துணைத்தலைவர் தமிழ் வெங்கடேசன் மற்றும் நீலகிரி சமூக தன்னார்வலர்களின் கூட்டமைப்பின் தலைவர் திரு சுரேஷ் ரமணா மற்றும் 20க்கும் மேற்பட்ட இதர அமைப்பு தலைவர்கள் முன்வந்து இவ்விழாவிற்கு வந்து இவ்விழாவின் சிறப்பிற்கு மேலும் மெருகேற்றினர்.
பத்திரிக்கையாளர்கள் சந்திப்புடன் இவ் விழா இனிதே நிறைவேறியது பத்திரிக்கையாளர் சந்திப்பில் தேசியத் தலைவர் மண்டலம் 17 தலைவர் மற்றும் நீலகிரியைச் சார்ந்த JCI தலைவர்கள் பத்திரிக்கையாளர்களுடன் கலந்துரையாடினர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment