நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கன்னேரிமுக்கில் முதல் கலெக்டர் ஜான் சல்லிவன் அவர்களின் நீலகிரி மாவட்ட முதல் கலெக்டர் அலுவலகம் தற்போது நினைவு இல்லமாக நீலகிரி ஆவணகாப்பகத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கன்னேரிமுக்கு சல்லிவன் நினைவுஇல்லத்தை பார்வையிட்ட நீலகிரி மாவட்ட ஆட்சியர் திருமதி. லஷ்மி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் கன்னேரிமுக்கில் அமைந்துள்ள சல்லிவன் நினைவு பூங்காவையும் பார்வையிட்டு அங்கு நடக்கும் பராமரிப்பு பணிகளை பார்வையிட்டு சல்லிவன் பூங்கா திறப்புவிழா ஆகஸ்ட் 15 அன்று நடைபெறும் என தெரிவித்தார். அதற்க்கான ஏற்பாடுகளை தோட்டக்கலைத்துறையினர் சுறுசுறுப்பாக திட்டமிட்டு வருகின்றனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K. A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment