வயநாடு நிவாரணம் கொட்டகம்பை பொதுமக்கள் குழு வழங்கியது. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 4 August 2024

வயநாடு நிவாரணம் கொட்டகம்பை பொதுமக்கள் குழு வழங்கியது.


வயநாடு மக்களுடன் தமிழக குரல் நீங்களும் இணையலாம் என்று நமது தமிழக குரல் முன்னெடுத்த வயநாடு மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்வுக்காக 

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கொட்டகம்பை  பொதுமக்கள் உடன் இணைந்து யாதும் ஊரே யாவரும் கேளீர் நண்பர்கள் குழுவின்  திரு.K.மணிகண்டன், திரு . பிரவீன், திரு. சந்தோஷ், திரு. S . மணிகண்டன், திரு. ராகுல் ஆகியோர்  

ஊர்மக்கள் மற்றும் தங்களின் பங்களிப்பாக

*அரிசி - 31 கிலோ 

*சோப்

*பேஸ்ட்

*வர்க்கி

*பிஸ்கட்

*ரஸ்க்

*ரவை

*மைதா

*மளிகை பொருட்கள் 

உள்ளிட்ட பொருட்களை தமிழக குரல் நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் திரு. K .A. கோபாலகிருஷ்ணன் அவர்களிடம் கோத்தகிரியில் நேரடியாக வழங்கினர்.

நிவாரண பொருட்கள் வழங்கிய கொட்டகம்பை பொதுமக்கள் மற்றும் யாதும் ஊரே யாவரும் கேளீர் நண்பர்கள் குழுவினருக்கும் தமிழக குரல் செய்திகுழுமத்தின் சார்பிலும் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு  சார்பிலும் மனமார்ந்த பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


தமிழக குரல் செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணு தாஸ் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad