நிபாவைரஸ் (NIPAH VIRUS) அறிகுறிகள் மற்றும் தடுக்கும் முறைகள் வெளியிட்டார் நீலகிரி ஆட்சியர் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 24 July 2024

நிபாவைரஸ் (NIPAH VIRUS) அறிகுறிகள் மற்றும் தடுக்கும் முறைகள் வெளியிட்டார் நீலகிரி ஆட்சியர்



நிபாவைரஸ் (NIPAH VIRUS) அறிகுறிகள் மற்றும் தடுக்கும் முறைகள்

நிபா வைரஸ் பரவும் விதம் -

நிபா வைரஸ் நோய் பழந்தின்னி வௌவால் மற்றும் பன்றி ஆகியவற்றின் சிறுநீர்,எச்சில் மற்றும் இதர திரவங்கள் மூலமாக மனிதர்களுக்கு பரவுகிறது. பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சளி, உமிழ் நீர் மற்றும் வியர்வை மூலமாக மற்றவர்களுக்கு பரவுகிறது.பழந்தின்னி வௌவால்கள் கடித்த பழங்கள் மூலமாக மனிதர்களுக்கு பரவ உள்ளது.

நிபா வைரஸ் நோயின் அறிகுறிகள் :

வாய்ப்பு

கடுமையான காய்ச்சல், தலைவலி, மயக்கம் சுயநினை விழத்தல், மனக்குழப்பம்,கோமா, ஆகியவை இந்நோயின் அறி குறிகளாகும். கிருமி தொற்று ஏற்பட்ட  5 முதல் 15 நாட்களுக்குள் இந்த அறிகுறிகள் வெளிப்படும். மேலும் அறிகுறிகள் தென்பட்ட 24 மணி முதல் 48மணி நேரத்திற்குள் தீவிர மயக்க நிலை, சுயநினைவிழத்தல் மற்றும் மனக்குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது.

நிபாவைரஸ் நோயினை தடுக்கும் முறைகள்:

• விலங்குகள் கடித்த பழங்கள் காய்கறிகளை உபயோகப்படுத்த கூடாது.

• காய்கறிகள் மற்றும் பழங்களை நன்றாக கழுவி பயன் படுத்த வேண்டும்.

இறந்த வௌவால்கள், பன்றிகள் இதர விலங்குளை தொடுவதை தவிர்க்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட நபரை தனிமைப்படுத்த வேண்டும்.

பொது இடங்களுக்கு சென்று வரும் போது சோப்பினால் கை கழுவுவதை தவறாமல்  பின்பற்ற வேண்டும்.

வீட்டின் சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும்.

• தேவையின்றி காடுகள் மற்றும் குகை பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

• காய்ச்சல் அறிகுறி தென்பட்டவுடன் அருகாமையிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவ மனைகளில் மருத்துவரை அணுகி அவரின் ஆலோசனைப்படி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.


மேலும் 1077 என்ற தொலைபேசி எண்ணிலும், dphnlg@nic.in என்ற

Mail ID-க்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

செய்யக் கூடாதவை:-

மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மருந்து உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad