நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் நேற்றைய தினம் காட்டு யானைகள் அங்குள்ள ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தை சேதப்படுத்தியது . மற்றும் யானைகளின் தொடர் தாக்குதலால் மனித உயிர்கள் பல பலிகள் ஆகியுள்ளன அது மட்டுமின்றி வீடுகளும் சேதமடைந்துள்ளது இதனால் நேற்றைய தினமே அப்பகுதி மக்கள் வீடுகளில் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டனர்.
அந்தப் போராட்டத்தின் தொடர் போராட்டமாக இன்று கூடலூர் பஸ் நிலையத்தில் CPIM கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் யானை மற்றும் வனவிலங்குகளிடமிருந்து மக்கள் காக்க வனத்துறையும் தமிழ்நாடு அரசும் முன்வர வேண்டும் யானைத்தாக்கி உயர்ந்த குடும்பத்தினருக்கு அரசு வேலையும் இழப்பீடாக ரூபாய் ஒரு கோடி வழங்க வேண்டும் என கேட்டு பெருந்திறன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டமானது கூடலூர் பகுதி செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக. நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment