இத்தலாரில் இருந்து எமரால்டு செல்லும் நெடுஞ்சாலையில் மண் சரிவு - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 26 July 2024

இத்தலாரில் இருந்து எமரால்டு செல்லும் நெடுஞ்சாலையில் மண் சரிவு




நீலகிரி மாவட்டம் உதகைக்கு உட்பட்ட இத்தலார் எனும் பகுதியில் தொடர் தென்மேற்கு பருவமழை காற்றுடன் கூடிய கன மழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் சேதம் அடைந்து வருகிறது இந்நிலையில் இன்றைய தினம் இத்தலாரில் இருந்து எமரால்டு செல்லும் நெடுஞ்சாலையில் அதிகாலை மண் சரிவு ஏற்பட்டது.


 இதனால் போக்குவரத்துக்கு சிறிதளவு மட்டுமே இடையூறு வாகனங்கள் சென்று கொண்டிருப்பதால் சம்பந்தப்பட்ட துறையினர் விரைவாக சம்பவ இடத்திற்கு வந்து ஜேசிபி இயந்திரம் மூலம் மண் சரிவினை அகற்றி சாலையை சீர் செய்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் இருசக்கர வாகனத்தில் வரும் வாகன ஓட்டிகள் மற்றும் நான்கு சக்கரத்தில் வரும் வாகன ஓட்டிகள் மிக கவனமாக இவ்விடத்தில் வருமாறு தமிழக குரல் இணையதள செய்தி பிரிவின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad